பெல்ஜியம் அரசு அந்நாட்டில் அரசு அலுவலக மேலதிகாரிகளுக்கு புதிய விதிமுறைகளை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. அதாவது அரசு அலுவலக மேலதிகாரிகள் பணி நேரம் தவிர்த்து பிற நேரங்களில் ஊழியர்களை அழைக்க கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இந்த உத்தரவானது பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பெல்ஜியம் அரசு ஊழியர்கள் “Right to Disconnect” என்ற இந்த முறையை தவறாக பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.