Categories
தேசிய செய்திகள்

பிப்-14 முதல் மழலையர் பள்ளிகள் மீண்டும் திறப்பு…. மாநில அரசு அறிவிப்பு…!!!!

ஒடிசா மாநிலத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியதால்  மழலையர் பள்ளிகள் மற்றும் பிளே ஸ்கூல் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் கொரோனா 3 ம் தொற்றை   தொடர்ந்து கடந்த மாதத்தில் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடுவதற்கு ஒடிசா அரசு உத்தரவிட்டது. அந்த வகையில் சுமார் 4 வாரங்களாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்களை தற்போது  பிப்ரவரி 7ஆம் தேதியன்று மீண்டும் திறக்க அனுமதி அளித்ததை தொடர்ந்து  1 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா  வேகம் குறைவதை கண்டு மழலையர் பள்ளிகள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகள் பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று திறக்கப்படும் என அறிவித்துள்ளது. இதுபற்றி ஒடிசா மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான மழலையர் பள்ளிகளில் மற்றும் பிளே ஸ்கூல்  திறப்பதில் அரசாங்கம்  மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகள் திறக்கப்படும் போது கொரோனா  பொருத்தமான நடத்தை விதிகளை கவனமாக பின்பற்ற வேண்டும். அதேபோல்  ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் 2 டோஸ்  தடுப்பூசி கட்டாயமாக போட்டிருக்க வேண்டும் என பள்ளி நிர்வாகங்களுக்கு மாநில அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |