மீண்டும் அனைத்து ரயில்களிலும் சமைக்கப்பட்ட உணவு வழங்க ரயில்வே நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ரயில்களில் உணவு சமைப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது நாடு முழுவதும் கொரோனா குறைய தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் ரயில்களில் உணவு கேன்டீன்களில் இயங்க உள்ளன. மேலும் தற்போது 428 ரயில்களில் உணவு வழங்கப்படுகிறது மற்றும் திங்கள்கிழமை முதல் அனைத்து ரயில்களிலும் சமைத்த உணவு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.