நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைவதும், அதிகரிப்பதுமாக உள்ளது. இந்த நிலையில் ஆந்திரப் பிரதேசத்தில் வருகின்ற 14-ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சங்கராந்தி விழாவை முன்னிட்டு மாநில அரசு கடந்த மாதம் 18 முதல் 31 வரை இரவு ஊரடங்கு பிறப்பித்திருந்தது. தற்போது அந்த உத்தரவை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.