கொல்கத்தாவில் நடைபெறும் ஐ.பி.எல். ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பியூஸ் சாவ்லாவை 6.75 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
2008 ஆம் ஆண்டு T 20 கிரிக்கெட் போட்டியான ஐ.பி.எல். தொடங்கப்பட்டது. வருகின்ற 2020-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 13 ஆவது ஐ.பி.எல். போட்டி நடைப்பெறவுள்ளது. இந்த போட்டிக்கான ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம் இன்று கொல்கத்தாவில் நடைபெற்றுவருகிறது. இந்த ஏலம் தொடங்கிய நேரத்தில் இருந்தே அணிகளின் உரிமையாளர்கள் போட்டிப்போட்டு வீரர்களை தன் வசப்படுத்தி கொண்டு வருகின்றனர். அணியின் உரிமையாளர்கள் மற்ற வீரர்களை போட்டி போட்டு ஏலம் எடுத்துக்கொண்டு இருந்தனர். ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதானமாக செயல்பட்டது.
பின்னர், சுழற்பந்து வீச்சாளரான பியூஸ் சாவ்லாவை ஏலம் எடுக்க சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே தீவிரமான போட்டி ஏற்பட்டது. பியூஸ் சாவ்லாவுக்கு 1 கோடி ரூபாய் தொடக்க விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. கடைசியில், சென்னை அணி 6.75 கோடிக்கு பியூஸ் சாவ்லாவை ஏலம் எடுத்தது. இதனால், சென்னை அணியிடம் 2.35 கோடி ரூபாய் மட்டுமே எஞ்சியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.