திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேளுக்குடியில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத சனிக்கிழமை முன்னிட்டு பெருமாளுக்கும், தனி சன்னதியில் இருக்கும் வீர ஆஞ்சநேயருக்கும் பன்னீர், தயிர்,சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.
Categories