Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பிரசவத்திற்கு பின்… சாப்பிட கூடிய… மருந்து குழம்பு…!!

குழந்தை பெற்றவர்களுக்கு வைக்கும் கருவாட்டு குழம்பு:

கருவாடு              – ஒரு துண்டு
பூண்டு                  – 100 கிராம்
கடுகு                     – 2 தேக்கரண்டி
சீரகம்                    – ஒரு தேக்கரண்டி
புளி                         – ஒரு கொட்டை
வற்றல்                  – ஒன்று
உப்பு, மஞ்சள்   – தேவைக்கேற்ப
மிளகு                    – 4

செய்முறை: 

முதலில் சீரகம், வற்றல், மிளகு ஆகியவற்றை நன்கு வறுத்து, பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு, அரைத்த மசாலா சேர்த்து, ஒரு கப் தண்ணீர் விட்டு, உப்பு மற்றும் மஞ்சள்த்தூள் போட்டு கொதிக்கவிடவும்.

பின்பு பூண்டு நன்கு வெந்து சாறு இறங்கும் போது சுத்தம் செய்த கருவாடு துண்டுகளை போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும். இப்போது சுவையான கருவாடு குழம்பு ரெடி.

Categories

Tech |