Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிரசவத்தை மறைத்த பெண்…. குப்பை தொட்டியில் கிடந்த குழந்தை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

குப்பை தொட்டியில் இருந்து பெண் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூளேஸ்வரன்பட்டி சக்தி விநாயகர் லே அவுட் பகுதியில் இருக்கும் சாலையோரத்தில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டு உள்ளது. அங்கு குப்பைகள் கொட்டப்பட்ட இடத்தில் பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் கிடப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றது தெரியவந்துள்ளது.

அதாவது அந்தப் பெண் ஒரு வாலிபரை காதலித்து நெருக்கமாக பழகியதால் கர்ப்பமாகியுள்ளார். அந்த பெண்ணிற்கு வயிறு சிறியதாக இருந்ததால் அவர் கர்ப்பமாக இருப்பது யாருக்கும் தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து திடீரென பிரசவ வலி ஏற்பட்டு அந்த பெண்ணுக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்துள்ளது. இது வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கருதி அந்தப் பெண் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளார். அதன் பிறகு காவல்துறையினர்  குழந்தையை அந்த பெண்ணிடம் ஒப்படைத்து விட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அந்த பெண்ணை காதலித்த வாலிபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |