Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பிரசவம் பார்த்த நர்சுகள்….. குழந்தையின் கையில் 3 இடங்களில் முறிவு…. அதிர்ச்சி சம்பவம்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொத்தூர் கிராமத்தில் கட்டிட தொழிலாளியான சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான வசந்தாவை குடும்பத்தினர் உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதித்தனர். அன்றைய தினம் வசந்தாவுக்கு சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் டாக்டர் இல்லாததால் நர்சுகள் பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது குழந்தைக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து குழந்தையின் பெற்றோரிடம் தெரிவிக்காமல் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் குழந்தையின் கையில் மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதை ஸ்கேன் மூலம் கண்டுபிடித்தனர். இதனால் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |