கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய குழந்தைகளோடு சிட்டி பூங்காவிற்கு சென்றுள்ளார். அப்போது நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் அவருடன் இருந்த இரண்டு குழந்தைகளும் பயந்து அழ தொடங்கியது. இதையடுத்து அங்கு இருந்தவர்கள் அந்த பெண்ணை சுற்றி கூட்டம் கூடியுள்ளனர். மேலும் ஆம்புலன்ஸ் மற்றும் அரசு மருத்துமனைக்கு தொடர்பு கொண்டுள்ளனர்.
ஆனால் யாரும் பதில் அளிக்காததால் பதற்றத்தில் நின்றுகொண்டிருந்துள்ளனர். அப்போது உடற்கல்வி ஆசிரியர் ஷோபா பிரகாஷ் பள்ளிக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் தெரிந்த டாக்டருக்கு போன் செய்துள்ளார். அப்போது அந்த மருத்துவர் அருகில் யாராவது இருந்தால் போனை கொடுக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து உடற்கல்வி ஆசிரியர் போனை வாங்கி பேசிய போது அந்த பெண்ணுக்கு தான் சொல்லும் அறிவுரையின்படி பிரசவம் பார்க்குமாறு ஊக்கப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து அந்த ஆசிரியரும் பழங்குடி பெண்ணுக்கு பிரசவம் பார்த்து 2 உயிரையும் காப்பாற்றியுள்ளார். இதையடுத்து அவர்களை ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சரியான நேரத்தில் தற்செயலாக வந்த ஆசிரியர் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு நல்ல முறையில் பிரசவம் பார்த்த உயிரை காப்பாற்றியதால் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.