நடிகை அனுஷ்கா ஷர்மா பேறுகாலத்தில் தலைகீழாக நின்று யோகா செய்யும் புகைப்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து தற்போது நடிகை அனுஷ்கா கர்ப்பமாக உள்ளார் . இந்நிலையில் அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலைகீழாக நின்று யோகா பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அனுஷ்கா சர்மா தலைகீழாக நிற்க அவரது கால்களை விராட் கோலி மேலே பிடித்தபடி நிற்கிறார்.
மேலும் புகைப்படத்தின் கீழே ‘யோகாவிற்கு எனது வாழ்வில் முக்கிய பங்கு உண்டு. தற்போது திரும்புதல் மற்றும் அதிகளவு முன்னோக்கி வளைதல் போன்ற ஆசனங்களை மட்டும் தவிர்த்து, கர்ப்பம் தரிப்பதற்கு முன்பாக செய்து வந்த அனைத்து யோகாசனங்களையும் நான் செய்யலாமென மருத்துவர் பரிந்துரைத்தார். நான் பல ஆண்டு காலமாக சிரசாசனத்தை செய்து வருகிறேன் . இந்த ஆசனத்தை சுவரின் உதவியோடு செய்த நான் கூடுதல் பாதுகாப்பிற்காக என் கணவரின் உதவியோடு செய்தேன் . பிரசவ காலத்திலும் யோகப்பயிற்சி தொடர முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.