Categories
சென்னை மாநில செய்திகள்

பிரசவ வலிக்கு பயம்…. 5 மாத கர்ப்பிணியின் முடிவு….. சோகத்தில் ஆழ்ந்த குடும்பம்….!!

பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி பெண்  தீக்குளித்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டம் திருவெற்றியூர் அருகில் உள்ள புது- வண்ணாரப்பேட்டைய  சேர்ந்த  இந்திரா நகர் 7-வது தெருவில்  வசித்து  வருபவர்  நாகராஜ்  இவர் தச்சு தொழிலாளி  ஆவார். இவரது மனைவி சுஷ்மிதா வயது 23 ஆகும். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். தற்பொழுது  சுஷ்மிதா 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கர்ப்ப காலத்தில் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

இதைப்பற்றி வீட்டில் இருப்பவர்களிடம் அவர் கூறியுள்ளார். அதற்கு அவர்கள் பிரசவம் ஆகும் வரை பொறுத்துக் கொள் என அறிவுரை வழங்கியுள்ளனர். ஆனால் பிரசவ வலிக்கு பயந்து சுஷ்மிதா நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று உள்ளார். பிறகு வீட்டிலுள்ள வேறு ஒரு அறைக்கு சென்ற அவர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குழித்துள்ளார்.

உடல் முழுவதும் தீ பிடித்து எரிந்து கொண்டிருக்கும் நிலையில் வலியால் அவர் துடித்துள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சுஷ்மிதாவின் உடலில் இருந்த தீயை அணைத்து பிறகு அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சஷ்மிதா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து  வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |