நடிகர் பிரசாந்தின் ஜோடி படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் பிரசாந்த். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் ஜோடி. இந்த படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே செம ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் தான் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தாராம் . ஆனால் அப்போது அவர் ஒரு ஹிந்தி படத்தில் நடித்து வந்ததால் ஜோடி படத்தில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது .