Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரசாந்த் கிஷோருடன் சோனியா காந்தி, ராகுல் அவசர ஆலோசனை….. அரசியலில் பரபரப்பு….!!!!

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் ராகுல்காந்தி, தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் தோல்வி அடைந்த பிறகு சோனியா காந்தி மூத்த தலைவர்களை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக தற்போது டெல்லியில் உள்ள ஜன்பத்தில் கட்சியின் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி திடீரென்று ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், திக்விஜய் சிங், அஜய் மக்கான், அம்பிகா சோனி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பிரபல தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் கலந்து கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் விரைவில் நடைபெற உள்ள குஜராத் உள்ளிட்ட மாநில சட்டமன்ற தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |