பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள சலார் திரைப்படத்தில் நடிகர் மகேஷ்பாபு நடிக்க மறுத்துள்ளார்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியானகேஜிஎப் 2 திரைப்படத்திற்கு எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பு கிடைத்திருக்ன்கிறது. இத்திரைப்படத்தின் வெற்றியால் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாக உள்ள சலார் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடிக்கின்றார்.
முதலில் இந்தப் படத்தின் கதையை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவிடம் பிரசாந்த்நீல் சொல்லி இருக்கின்றார். ஆனால் மகேஷ் பாபுக்கு இந்த கதை பிடிக்க வில்லையாம். இதன் பிறகு அந்த பிரபாஸிடம் கூறினாராம் இயக்குனர். பிரபாஸ் இந்தக் கதைக்கு ஒப்புதல் தர சலார் படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியைக் கண்டால் மகேஷ்பாபு மிகவும் வருத்தப்படுவார். இந்த படத்தின் வெற்றியால் அவரின் நிம்மதி கெட்டு விடும் என திரை வட்டாரங்கள் கூறுகின்றார்கள்.