Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரசாந்த் படத்திற்கு பாடல் பாடிய அனிருத்-விஜய் சேதுபதி”…. நடனம் இயக்கும் பிரபுதேவா…!!!!

அனிருத்-விஜய் சேதுபதி கூட்டணியில் பிரசாந்த் திரைப்படத்திற்கு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா உலகில் வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் பிரசாந்த். இவர் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்த நிலையில் தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு அந்தகன் என்ற திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்க பிரசாந்த் நடிக்கின்றார். இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், சிம்ரன், வனிதா, யோகி பாபு, பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றார்கள்.

இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள டோரா புஜ்ஜி என்ற பாடலை அனிருத்தும் விஜய் சேதுபதியும் இணைந்து பாடியிருக்கின்றார்கள். இந்த பாடலுக்கு நடிகர் பிரபுதேவா நடனத்தை இயக்கியுள்ளார். 50 நடன கலைஞர்கள் ஆடும் இப்பாடல் காட்சிக்காக பிரம்மாண்டமாக அரங்கம் அமைக்கப்படுகின்றது. இந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டதும் திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெற இருக்கின்றது. கலைப்புலி எஸ் தாணு உலகம் எங்கும் படத்தை திரையிட திட்டமிட்டு இருக்கின்றார்.

Categories

Tech |