சேலம் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக எம்பி பார்த்திபனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. தற்போது வரை கொரோனாவால் விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளதால், அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி சேலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக எம்பி பார்த்திபன் என்பவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.