சூசையப்பர் ஆலயத்தில் திருவிழா நடைபெற்றுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சஞ்சாயநகரில் புனித சூசையப்பர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவை பாதை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிலையில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட நிலையில் எடுத்து சென்று நகரின் முக்கிய வீதி வழியாக சூசையப்பர் ஆலயத்தை வந்தடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்குத் தந்தைகள், ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.