பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களில் மயானக்கொல்லை திருவிழா சிறப்பாக நடைபெற்று உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் பகுதியில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனுக்கு மயானக்கொல்லை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர், மஞ்சள், தேன், திரவியம் போன்ற பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதன்பிறகு பக்தர்கள் மீது அம்மன் வேடமணிந்தவர்கள் நடந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
விக்கிரவாண்டி பகுதியில் புகழ்பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மயானக்கொல்லை திருவிழா சிறப்பாக நடைபெற்று உள்ளது. இந்த திருவிழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் மேல்மலையனூர் அருகிலுள்ள அவலூர் பேட்டை பகுதியில் புகழ்பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தத் திருக்கோவிலில் அம்மனுக்கு மயானக்கொல்லை திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.