சிறப்பாக நடைபெற்ற கோவில் குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அருகே தேம்பிராட்டு கிராமத்தில் பழமை வாய்ந்த பெரிய நாயகி சமேத தேயா பிறையான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கோகிலேஸ்வரர், ரேணுகாம்பாள், வரதராஜப்பெருமாள், விநாயகர், முருகப்பெருமான், பெரியநாயகி, ஐயப்பன் உள்ளிட்ட சுவாமி சன்னிதானங்கள் அமைந்துள்ளது.
இந்த சுவாமி சன்னிதானங்கள் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜை, தம்பதியினர் பூஜை, தன பூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, விக்னேஸ்வர பூஜை போன்றவைகள் சுவாமிக்கு சிறப்பாக நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.