Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பிரசித்தி பெற்ற அம்மன்…. சிறப்பாக நடைபெற்ற மயானகொல்லை திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

சிறப்பாக நடைபெற்ற மயானகொல்லை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூர் பகுதியில் இருக்கும் சின்ன ஆனைவாரியில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் திருவிழா கடந்த 11-ஆம் தேதி தொடங்கி கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், பூங்கரகம், பம்பை உடுக்கை, சிலம்பாட்டம், பாவாடைராயனுக்கு மகா கும்ப படையல், புஷ்ப கரகம் அமைத்தல் போன்ற பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து மேளதாளத்துடன் அம்மனுக்கு வீதி உலா நடைபெற்றது. அதன்பின் ரணகளிப்பு, சக்தி கரகம் சோடித்தல், அக்னி சட்டி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதன் பிறகு அம்மனை அலங்காரம் செய்து மாட்டு வண்டியில் வைத்து ஊர்வலமாக மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். இந்த நிகழ்ச்சியின் போது பக்தர்கள் சிலர் அம்மன் போன்று வேடமணிந்தனர். அதன் பிறகு அம்மனுக்கு படையல் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டு மயானகொல்லை திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Categories

Tech |