Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற அம்மன்…. சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

பிரசித்தி பெற்ற திருக்கோவிலில் தேரோட்ட திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 18-ஆம் தேதி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து பூக்குண்டம் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கினர். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு தேரோட்டம் நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் வருகிற 28-தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா முடிவடைகிறது.

Categories

Tech |