மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அழகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாதத்தில் தைலக்காப்பு திருவிழா நடைபெற்று வருகின்றது.
இந்த விழாவினுடைய இரண்டாவது நாளான நேற்று சுந்தரராஜ பெருமாள் தேவியர்களுடன் பாம்பனையில் அருள் பாலித்தார். மேலும் சிராப்தீநாதன் சேவையும் நடைபெற்றது. இதனை பக்தர்கள் கண் குளிர கண்டு மகிழ்ந்தனர்.