Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா…. கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழா…!!

ஆண்டவர் தர்காவின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்காவிற்கு வெளி மாவட்டம், மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வருகிற 4-ம் தேதி இந்த தர்காவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. மேலும் தர்கா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் 13-ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாகூர் தர்காவிலுள்ள 5 நாட்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மேலும் தர்கா பரம்பரை கலீபா மஸ்தான் சாகிப் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளார். அதன்பின் சாகிபு மினராவில் பாய்மரம் ஏற்றப்பட்டுள்ளது. பின்னர் தஞ்சையை ஆட்சி செய்த மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிக்கொடுத்த பெரிய மினரா, ஒட்டு மினரா, முதுபக் மினரா, தலைமாட்டு மினரா ஆகியவற்றில் பாய்மரம் ஏற்றப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தற்காலிக நிர்வாக குழுவினர் மற்றும் பரம்பரை போன்ற ஆப் டிரஸ்டிகள் சிறப்பாக செய்து கொடுத்துள்ளனர்.

Categories

Tech |