Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவில்…. 17 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் பணிகள் …. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

 பிரசித்தி பெற்ற கோவிலில் நடைபெறும் பணிகளை  அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அடுத்த மாதம்  6-ஆம்  தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு கோவிலை சுற்றி வண்ணகற்கள் பதிக்க பேரூராட்சி சார்பில் 17 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது.

இதனை பேரூராட்சி உதவி இயக்குனர் விஜயலட்சுமி, அறநிலையத்துறை உதவி கோட்ட பொறியாளர் மோகன்தாஸ், பொறியாளர் ராஜ்குமார், கோவில் மேலாளர் மோகன்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் மகாராஜன், தலைவர் வெண்ணிலா ரமேஷ், துணை தலைவர் சுந்தரராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கார் பார்க்கிங், குடிநீர் வசதி, பக்தர்கள் வரும் வழி, செல்லும் வழி என அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்துள்ளனர்.

Categories

Tech |