ஆண்டாள் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றினர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பார்த்தன்பள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. 108 வைணவ திவ்ய தேச ஆலயங்களில் ஒன்றான இந்த ஆலயத்தின் பெருமாளை அர்ஜுனன் விரதமிருந்து வழிபட்டதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இந்த ஆலயத்திலுள்ள பெருமாள் மற்றும் ஆண்டாளுக்கு தற்போது சிறப்பு அபிஷேகம் நடந்துள்ளது.
அதன்பின் அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு மேளதாளம் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனையடுத்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றியுள்ளனர்.