பிரசித்தி பெற்ற ஆலயத்தில் தவக்கால பெருவிழா நடைபெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசடிப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற புனித வியாகுல அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தவக்கால பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று 16-வது ஆண்டு தவக்கால பெருவிழா நடைபெற்றது.
இந்நிலையில் பங்குச்சந்தை ஜேசுராஜ், ஆலங்குடி அருட்தந்தையார் ஆர்.கே. குழந்தைசாமி, கித்தேரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு திருப்பலி நிகழ்ச்சி நடத்தினர். அதன் பின்னர் விழாவில் கலந்துகொண்ட ஏராளமான பொதுமக்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. இந்த திருவிழாவில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.