திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் பாஸ்கு விழா நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இடைகாட்டூர் பகுதியில் பிரசித்தி பெற்ற இருதய ஆண்டவர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பாஸ்கு விழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு நேற்று பாஸ்கு விழா நடைபெற்றது. இந்நிலையில் நாடக கலைஞர்கள் இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக நடித்து காட்டினர்.
இந்த விழாவில் திருச்சி கிழக்கு மாவட்ட எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி சசிகுமார் மற்றும் பல்வேறு ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்துள்ளனர். இந்த திருவிழாவிற்கு தேவையான ஏற்பாடுகள் ஆலயத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ளது.