பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் அருகே காந்திநகர் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 1-ம் தேதி வருடாந்திர தேர்த் திருவிழா தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனைகள், மகா கணபதி ஹோமம், அம்மன் சிறப்பு ஹோமம், கொடியேற்றுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதன்பிறகு பக்தர்கள் சின்ன சூண்டி பகுதியிலிருந்து மேளதாளங்கள் முழங்க முளைப்பாரி, பால்குடம் மற்றும் பறவை காவடி போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை எடுத்து வந்தனர். இந்த நேர்த்திக் கடன்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.இதைத்தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பால்குடங்கள் மூலம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும்அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.