Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவிலில்….. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை…. வெளியான அறிவிப்பு….!!!

பிரசித்தி பெற்ற கோவிலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் வனப் பகுதியில் அமைந்துள்ளதால் காட்டு யானைகள், காட்டுப்பன்றி, மான், சிறுத்தை போன்ற வனவிலங்குகள் வசித்து வருகிறது. இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வனப் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை வீசுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.

இதன் காரணமாக வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாட்டர் பாட்டில், பிளாஸ்டிக் பை போன்ற பொருட்களை எடுத்து வரக்கூடாது என கூறியுள்ளனர். இதனையடுத்து கோவிலை சுற்றி இருக்கும் கடைகளிலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் சோதனைக்கு பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப் படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |