பிரசித்தி பெற்ற கோவிலில் மக்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக நீண்ட நேரம் காத்திருந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக தினமும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில் நேற்றும், இன்றும் விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர். இங்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதன்படி பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவதற்காக டோக்கன் வாங்குவதற்கு சென்றுள்ளனர்.
அப்போது டோக்கன் வழங்கும் மெஷின் பழுதானதால் நீண்ட நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். இன்று டோக்கன் வழங்குவதற்கு பழைய முறையை செயல்படுத்தாமல் புதிதாக மெஷின் மூலம் டோக்கன் வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த மெஷினை சோதனை செய்வதற்காக இன்று கோவிலில் வைத்துள்ளனர். ஆனால் மெஷின் அடிக்கடி பழுதாகி பாதியிலேயே நின்று விட்டது. இதன் காரணமாக பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் உள்ளிட்ட பலர் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.