Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவிலில் ஆடிப்பெருக்கு விழா….. சிறப்பாக நடைபெற்ற பூஜை….. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!!

சிறப்பாக நடைபெற்ற தெப்ப திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடி பொன்னேரி பகுதியில் பிரசித்தி பெற்ற சர்வேஸ்வரி சமேத சர்வேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் ஆடிப்பெருக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் மூர்த்தியூர், பெரிய பொன்னேரி, சிறிய பொன்னேரி, சின்ன மண்டலவாடி மற்றும் பெரிய மண்டலவாடி பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவுக்கு ஊர் கவுண்டர்கள் தலைமை தாங்கினார்.

இந்நிலையில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள், அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் போன்றவைகள் நடைபெற்றது. இதனையடுத்து வான வேடிக்கை மற்றும் நடன நிகழ்ச்சிகள் போன்றவைகளும் நடைபெற்றது. மேலும் சுவாமி மற்றும் அம்பாள் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் தெப்பக்குளத்தை சுற்றி வரும் போது ஏராளமான பக்தர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து தரிசனம் செய்தனர்.

Categories

Tech |