Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்கள்…. சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேகம்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

பிரசித்தி பெற்ற கோவில்களில் சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆர். புதுப்பட்டினம் கிராமத்தில் ஸ்ரீ சுப்ரமணிய சாமி கோவில், ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில், ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோவில் போன்ற பிரசித்தி பெற்ற கோவில்கள் அமைந்துள்ளது. இந்த கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 17-ஆம் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது. இந்நிலையில்  சுவாமிகளுக்கு ஐந்து கால யாக பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதன் பின்னர் சிவஸ்ரீ பிச்சை குருக்கள் தலைமையில் ஆச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஆர் புதுப்பட்டினம், மிமிசல், கோட்டைப்பட்டினம், ஜகநாத பட்டினம், முத்துக்கு டா உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் சாமியை தரிசனம் செய்துள்ளனர். அதன் பின்னர் அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |