Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்…. தரிசனம் செய்து பக்தர்கள்….!!

அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகிரிபட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதைப்போல் நேற்று அஷ்டமியை முன்னிட்டு வடுக பைரவருக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், புஷ்பம், தயிர், உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதன் பின்னர் ரவி குருக்கள் தலைமையில் வைரவருக்கு சந்தன அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த பூஜையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  பைரவரை தரிசனம் செய்துள்ளனர். அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

Categories

Tech |