அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள செட்டி நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அமைந்துள்ள காலபைரவருக்கு மாதம்தோறும் அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று அஷ்டமியை முன்னிட்டு வைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
அதன் பின்னர் மஞ்சள், குங்குமம், வெட்டிவேர், நன்னாரி வேர், கடுக்காய், வெண்கடுகு உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு யாகம் நடைபெற்றது. இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.