மாசி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், திருநெல்வேலி,உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்துள்ளனர்.
இதனையடுத்து மாரியம்மனுக்கு பால், தயிர், திருநீர், உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின்னர் பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.