புகழ்பெற்ற உலகளந்த பெருமாள் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் பகுதியில் புகழ் பெற்ற உலகளந்த பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த வருடமும் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. இதைதொடர்ந்து ஹம்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்துள்ளனர். இந்த திருவிழாவை முன்னிட்டு இன்று சுவாமி காலை யாளி வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் வலம் வருவார். அதன்பிறகு நாளை சுவாமி தங்க பல்லக்கில் வீதி உலாவும், அனுமந்த வாகனத்தில் வீதி உலாவும் நடைபெறும். அதன் பிறகு தோளுக்கு இனியாள் நிகழ்ச்சி நடைபெறும். இந்த விழாவின் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் கிராம மக்கள் இணைந்து செய்துள்ளனர்.