Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. கிணற்றுக்குள் பின்னிப்பிணைந்து நடனமாடிய பாம்புகள்…. உற்சாகத்தில் பக்தர்கள்….!!!!

கோவில் கிணற்றுக்குள் 2  பாம்புகள்  பின்னிப்பிணைந்து  நடனமாடியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியபட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன், மாரியம்மன், பகவதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. அதே பகுதியில்  கோவிலுக்கு சொந்தமான 40 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் சாமிகளுக்கு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.

அப்போது கோவில் கிணற்றின் மேல் பகுதியில் இருந்த  சுமார் 7 அடி நீளமுள்ள  நல்லபாம்பும்,சாரைபாம்பும்   திடீரென கிணற்றுக்குள் குதித்துள்ளது. அதன்பின்னர் தண்ணீருக்குள்  பின்னிப்பிணைந்து சுமார் 3 மணி நேரம்   நடனமாடியுள்ளது. இதனை பார்த்த பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபட்டுள்ளனர். மேலும் இது குறித்து பக்தர்கள் கூறியதாவது. எங்கள் ஊரில் இது போன்ற நிகழ்வு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. அதன் பிறகு தற்போது தான் இந்த அதிசய காட்சி நிகழ்ந்துள்ளதாக கூறியுள்ளனர்.

Categories

Tech |