மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலை தெரியாத நபர்களே இருக்க முடியாது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் தினமும் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இக்கோவிலின் மூலவரான மீனாட்சி அம்மன் பிரம்மாண்டமாகவும், தோரணையாகவும் அமர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார்.
இதற்கிடையே சில நபர்கள் பெண்ணின் அழகை வர்ணிக்க மதுரையிலிருக்கும் மீனாட்சி அம்மன் போல் இருக்கிறாள் என்பார்கள். இந்நிலையில் தமிழகத்தில் தமிழ் வருடமான சித்திரை மாதம் பிறந்துள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெறவுள்ளதால் அதற்கான கொடியேற்றம் நடைபெற்றது.