மீனாட்சி- சுந்தரேஸ்வரருக்கு பிரம்மோற்சவ விழா நடைபெற்றுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையத்தில் ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர். வெங்கட் ராமராஜ் அவரது குடும்பத்திற்கு சொந்தமான மீனாட்சி -சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் மாசி பிரம்மோற்சவ திருவிழா நடத்துவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டு நேற்று தேரோட்டத்தை முன்னிட்டு சொக்கர்- மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற தேரோட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சாமியை தரிசனம் செய்துள்ளனர்.