அம்மனுக்கு பெண்கள் திருவிளக்கு ஏற்றி பூஜைகள் செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாவலர் பகுதியில் பிரசித்தி பெற்ற வீரமகாளியம்மன் – முனீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மக திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று மாசி மக திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது.
இந்நிலையில் பெண்கள் பத்திரகாளி அம்மனுக்கு திருவிளக்கு ஏற்றி பூஜையில் செய்தனர். அதன் பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்துள்ளனர்.