Categories
Uncategorized திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

பெரியநாயகி அம்மனுக்கு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வாணியன்குளம் பகுதியில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இன்று சிவராத்திரியை முன்னிட்டு அம்மனுக்கு பக்தர்கள் எடுத்து வந்த 108 பால்குடங்களை  கொண்டு  அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதனையடுத்து கருவறையில் இருக்கும் அம்மன் மீது சூரிய ஒளி பரவும் அதிசய நிகழ்வு நடைபெற்றது.  அதன்பின்னர்  மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு கொண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் பல்வேறு பகுதியில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை சரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |