பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வீரசிங்கம்பேட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளில் விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி போன்றவற்றை எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
அதன் பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதனையடுத்து பக்தர்கள் மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபட்டனர். இந்த கோவிலில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.