மதுரையில் தமிழ் புத்தாண்டு நாளன்று மீனாட்சி அம்மனுக்கு தங்கத்தாலான கவசமும் வைர கிரீடமும் அணிவிக்கபடவுள்ளது.
தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு சித்திரை 1 ஆம் தேதி பிறக்கிறது. இதனை முன்னிட்டு தமிழகத்திலிருக்கும் மக்கள் அவர்களுக்கு பிடித்த சுவாமியை தரிசனம் செய்வார்கள். மேலும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும், அலங்காரங்களும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். இதனையடுத்து மதுரை மாவட்டத்தில் அமைந்திருக்கும் மீனாட்சி அம்மன் கோவிலை தெரியாத நபர்களே இருக்க முடியாது.
இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மதுரை கோவிலில் அமைந்திருக்கும் மூலவரான மீனாட்சி அம்மனுக்கு தங்கத்தாலான கவசமும், வைரத்தாலான கிரீடமும் சாத்தப்படவுள்ளது. மேலும் சுந்தரேஸ்வரருக்கு வைரத்தாலான நெற்றிப்பட்டை அறிவிக்கப்படவுள்ளது. இதனை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.