சௌமிய நாராயணப் பெருமாளுக்கு தீர்த்தவாரி உற்சவம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சௌமியநாராயணப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு நிறைவு நாளான நேற்று சௌமிய நாராயணப் பெருமாளுக்கு தீர்த்தவாரி செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதன் பின்னர் சௌமிய நாராயண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் காலை மற்றும் இரவில் தெப்ப மண்டபத்தில் எழுந்தருளியுள்ளார். இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்துள்ளனர். திருவிழாவிற்கு தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தானம் டி. எஸ். கே. மதுராந்தக நாச்சியார், மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் ஆகியோர் செய்துள்ளனர்.