Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிரசித்தி பெற்ற கோவில்… நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்….!!

சனி பிரதோஷத்தை முன்னிட்டு மலை ஏறி சுந்தரமகாலிங்க சாமியை பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் அமாவாசைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதைப்போல் நேற்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், திருநீர், பன்னீர், சந்தனம், தேன், தயிர், உள்ளிட்ட 18  வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து  சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களை காலை 6.30 மணி அளவில் கேட் திறந்து விடப்பட்டுள்ளது.  பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மலையேறி வந்து சாமியை  தரிசனம் செய்துள்ளனர். மேலும் அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |