மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் பிரசித்தி பெற்ற மானைகால் மகாமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பகதர்கள் ஒரு வாரத்திற்கு முன்பு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து நேற்று திருக்குறள் கரையில் இருந்து காவடி, பால் குடம், அழகு காவடிகளை பக்தர்கள் எடுத்து வந்து கோவிலின் முன்பு அமைக்கப்பட்ட குழியில் இறங்கி தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர். அதன் பின்னர் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபட்டனர்.