Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நாடடைபெற்ற ஆழித்தேரோட்டம்…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்….!!

தியாகராஜன் திருக்கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற தியாகராஜர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த  ஆண்டு இன்று ஆழித் தேரோட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று இரவு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி. கே. கலைவாணன், உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விநாயகர், சுப்ரமணியர், கமலம்மாள், சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளும் தேர்களை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அதன் பின்னர் இன்று காலை தியாகராஜர் புறப்பட்டு ஆழித்தேரில் எழுந்தருளினார். இதனையடுத்து விநாயகர், சுப்ரமணியர், கமலம்மாள், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தேர்களில் எழுந்தருளினர். இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமியை தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |