Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற ஆட்டு கிடாய் சண்டை…. கலந்து கொண்ட பொதுமக்கள் ….!!

மந்தையம்மன் கோவில் ஆட்டுக் கிடாய் முட்டு சண்டை நடைபெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பொட்டலப்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மந்தையம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆட்டு கிடாய் முட்டு சண்டை நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிடாய்கள்  கலந்து கொண்டது.

அதன் பின்னர் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் போட்டியை  தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து போட்டியில் கலந்து கொண்ட அனைத்து கிடாய்களின்  உரிமையாளருக்கும் பொங்கல் பானையும், வெற்றி பெற்ற கிடாய்களின்  உரிமையாளருக்கு பீரோல் மற்றும் சிறப்பாக சண்டை செய்த கிடாய்களின்  உரிமையாளருக்கு குத்துவிளக்கு போன்ற பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த போட்டியினை சிவகங்கை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |