Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற சமயபுரமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் தீ. ஊரணி கைலாச விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர்.

அதன் பின்னர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், திருநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து  கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் விரதம் இருந்து வந்த பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்துள்ளனர். இதனையடுத்து  பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |